Actress Angelina Jolie: நடிகை ஏஞ்சலினா ஜோலி புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அவர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Actress Angelina Jolie: நடிகை ஏஞ்சலினா ஜோலி புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அவர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Published on: May 5, 2025 at 1:46 pm
சென்னை மே 5 2025: பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி சினிமா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில் நடிகை ஏஞ்சலினா ஜோலி புதிய படம் ஒன்றில், நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படம் வங்கிக் கொள்ளையர்கள் பற்றியது எனக் கூறப்படுகிறது.
படத்தின் கதை என்ன?
வங்கி கொள்ளையர்கள் பற்றிய படம் ஒன்றில் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடித்த உள்ளார். இந்தப் படத்தில் ஏஞ்சலினா ஜோலி சாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஒரு வங்கி, வங்கிக் கொள்ளையர்களால் திட்டமிட்டு கைப்பற்றப்படுகிறது. வங்கியில் பலர் பிணை கைதிகளாக கொள்ளையர்களால் பிடிக்கப்படுகின்றனர்.
இந்த பினை கைதிகளில் ஒருவராக ஏஞ்சலினா ஜோலியும் சிக்கிக் கொள்கிறார். இதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. மேலும் இது ஒரு நாவலை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதை எனவும் இந்த நாவல் ஏற்கனவே வெப் தொடராக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏஞ்சலினா ஜோலி நடிக்கும் புதிய படத்தை வேர்ல்ட் வார் ஜி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மார்க் பஸ்டர் என்பவர் இயக்குகிறார்.
ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே இருமுறை திருமணம் ஆனவர் ஆவார். கடைசியாக அவர் நடிகர் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சினிமா படங்களில் நடிப்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நடிகை ஏஞ்சலினா ஜவுளி தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2400 ஆண்டுகள் ஆட்சி; பாடத்திட்டத்தில் சோழர்களின் வரலாறு எங்கே? நடிகர் மாதவன் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com