ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு, ‘ஸாரி’ எனப் பதிலளித்தார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு, ‘ஸாரி’ எனப் பதிலளித்தார்.
Published on: September 1, 2024 at 10:16 pm
கேரள ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு சென்னையில் பதிலளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “மன்னிக்கவும். அந்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியுள்ளது. இந்த கமிட்டியில் விசாரணையில் கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதையும் படிங்க : ‘துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்; விஜய்க்கு வாழ்த்துகள்’: ரஜினிகாந்த்
இதையடுத்து கேரள மாநில திரைப்பட சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. தலைவர் பதவியை மோகன் லால் துறந்தார்.“இந்த விவகாரத்தில் விசாரணை நடக்கட்டும்; நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. இந்தப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com