தமிழ்நாட்டில் 25 டோல் கேட்களில் கட்டண உயர்வு இன்று (செப்.1, 2024) முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் 25 டோல் கேட்களில் கட்டண உயர்வு இன்று (செப்.1, 2024) முதல் அமலுக்கு வந்தது.
Published on: September 1, 2024 at 4:39 pm
Tamil Nadu Toll fee hike | தமிழ்நாட்டில் 25 டோல் கேட்களில் கட்டண உயர்வு இன்று (செப்.1, 2024) முதல் அமலுக்கு வந்தது. இந்த டோல்கேட்களில் ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 37 டோல்கேட்கள் உள்ளன. இதில் 25 டோல்கேட்களில் கட்டண உயர்வு செப்.1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. மீதமுள்ள டோல்கேட்களில் நடப்பாண்டு ஏப்.1ஆம் தேதியே கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், “வாகனங்களுக்கு ஏற்ப டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டோல்கேட்கள் மூலமாக 2022-23ஆம் ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 817 கோடி வருவாய் கிடைத்து இருந்தது.
இது, 2023-24ஆம் ஆண்டுகளில் 10 சதவீதம் வரை உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 221 கோடி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஜில் ஜில் ஆகப்போகும் தமிழ்நாடு: செம்ம அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com