Pahalgam Attack: பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Pahalgam Attack: பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Published on: April 25, 2025 at 11:34 pm
Updated on: April 25, 2025 at 11:35 pm
புதுடெல்லி, ஏப்.25 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி 26 அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டு நீர் கூட பாய இந்தியா அனுமதிக்காது என்று ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) தெரிவித்தார்.
சி.ஆர் பாட்டீல் ட்வீட்
मोदी सरकार द्वारा सिंधु जल संधि पर लिया गया ऐतिहासिक निर्णय पूर्णतः न्यायसंगत और राष्ट्रहित में है।हम ख्याल रखेंगे की पाकिस्तान में सिंधु नदी का एक बूंद पानी भी नहीं जाए । pic.twitter.com/yJhdzdDAAb
— C R Paatil (@CRPaatil) April 25, 2025
இதற்கிடையில் சி.ஆர் பாட்டீல், “இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கூடப் பாயாமல் பார்த்துக் கொள்வோம்” என மேலும் கூறினார். இது தொடர்பாக சி.ஆர். பாட்டீல் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த மோடி அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு சட்டபூர்வமானது மற்றும் தேசிய நலனுக்கானது. ஒரு சொட்டு சிந்து நதி நீர் கூட பாகிஸ்தானுக்குள் பாயாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.
1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள்’: மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com