AR Rahman: ‘வீர ராஜா வீர’ பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பின்னடைவை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
AR Rahman: ‘வீர ராஜா வீர’ பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பின்னடைவை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: April 25, 2025 at 10:42 pm
புதுடெல்லி, ஏப்.24 2025: 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பு தொடர்பாக பதிப்புரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த வழக்கை, 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தனது தந்தை நாசர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து இந்தப் பாடல் நகல் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி பிரதிபா எம் சிங் இன்று தீர்ப்பளித்தார். அப்போது, “’வீர ராஜா வீர’ பாடல் ‘சிவ ஸ்துதி’ பாடலின் இசையமைப்பை அடிப்படையாகக் கொண்டதோ அல்லது ஈர்க்கப்பட்டது அல்ல” என்றார். எனினும், “இந்தப் பாடல் சில மாற்றங்களுடன் உண்மையில் அதற்கு ஒத்ததாக இருக்கிறது” என தீர்ப்பளித்தார்.
மேலும், ஜுனியர் தாகர் சகோதரர்களுக்கு பாடலுக்கு கிரெடிட் வழங்க வேண்டும் என்றும் பிரதிவாதிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க : ₹4 கோடிக்கு பங்களா வாங்கி ₹8 கோடிக்கு விற்ற நடிகர் அக்ஷய் குமார்.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com