Amrit Vrishti FD scheme: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அம்ரித் விருஷ்டி என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வட்டி மற்றும் இதர விவரங்கள் இங்குள்ளன.
Amrit Vrishti FD scheme: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அம்ரித் விருஷ்டி என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வட்டி மற்றும் இதர விவரங்கள் இங்குள்ளன.
Published on: April 24, 2025 at 8:39 pm
சென்னை, ஏப்.24 2025: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, “எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி” என்ற திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 444 நாள்கள் ஆகும்.
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி வட்டி விகிதம்
இந்தத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பொதுக்குடிமக்களுக்கு 7.05 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முன்னதாக, 7.25 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டது.
மேலும், மூத்தக் குடிமக்களுக்கு இந்தத் திட்டத்தில் கூடுதலாக 0.20 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மூத்தக் குடிமக்கள் 7.55 சதவீத வட்டி விகிதத்தை பெறுவார்கள். முன்னதாக அவர்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.
திட்டத்தை முன்கூட்டியே மூடினால்..
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தை முன்கூட்டியே மூடினால், ரூ.5 லட்சம் வரையிலான எஃப்.டி திட்டங்களுக்கு 0.50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், ரூ.5 லட்சம் முதல் ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட்களை முன்கூட்டியே மூடினால் 1 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், முதல் 7 நாள்களுக்குள் எஃப்.டியை முறித்துக் கொண்டால் எவ்வித வட்டியும் வழங்கப்படாது.
மற்ற டெபாசிட் திட்டங்களில் வட்டி எப்படி?
ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கியை பொறுத்தவரை 3.50 சதவீதம் முதல் 6.90 சதவீதம் வரை சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் அல்லாத திட்டங்களுக்கு பொதுக்குடிமக்களுக்கு வங்கி வழங்குகிறது.
மேலும், மூத்தக் குடிமக்கள் 4 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2025ல் பெஸ்ட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்.. 5 ஆண்டுகளில் 25 சதவீதம் ரிட்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com