Vaiko: காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Vaiko: காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published on: April 24, 2025 at 8:44 pm
சென்னை, ஏப்.24 2025: “காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் அப்பாவி இந்தியர்கள் 24 பேர் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியும், பதற்றமும் ஏற்பட்டது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “4 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் தேனிலவு சென்ற இடத்தில் கோரமாக கொல்லப்பட்ட செய்தி கேட்ட மாத்திரத்திலேயே நமக்கு நெஞ்சம் பதறுகிறது. அந்தக் குடும்பத்தினரும், உற்றார் உறவினரும் எவ்வளவு துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை.
இந்தத் துயரமான வேளையிலும், துப்பாக்கிச் சூட்டில் தப்பி வந்தவர்களை காஷ்மீர் இசுலாமிய இளைஞர்கள் பாதுகாத்து அழைத்துச் சென்றனர் என்ற செய்தி மனதுக்கு ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தச் சூழ்நிலையில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசும், தமிழகமும் பக்க பலமாக துணை நிற்கும் என்று அறிக்கை தந்துள்ளார்கள்.
காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு துணையாக நிற்கும் என்ற உணர்வை வெளிப்படுத்தி உள்ளன. இந்தப் படுகொலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : முட்டை மயோனசுக்கு திடீர் தடை: தமிழ்நாடு அரசு அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com