Australian universities ban Indian students: இந்தியாவில் உள்ள ஐந்து மாநில மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Australian universities ban Indian students: இந்தியாவில் உள்ள ஐந்து மாநில மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 21, 2025 at 1:19 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் மிகவும் கடினமான விதிகளை விதித்துள்ளார். இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில் ஆஸ்திரேலியா 5 இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. இது மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் சில அமைப்புகளுடன் முழு நேரமாக பணியாற்றுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது விசா விதிமுறை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், குஜராத், உத்தரகன்ட் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் ஆஸ்திரேலியா பல்கலைகளுக்கும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா தடை விதித்திருந்தநிலையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவர்கள் விசாவை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சேர்க்கைக்கான முடிவுகளை எடுக்க பல்கலைக்கழகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியா கல்வி பிரதிநிதிகள் சங்கம் இந்த முடிவு பாரபட்சமானது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க கனடாவில் இந்திய மாணவி மீது துப்பாக்கிச் சூடு.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com