5 oldest gold ETFs in India: தங்க இ.டி.எஃப்.கள் அடிப்படையில் தங்கத்தின் விலைகளைக் கண்காணிக்கும் பரஸ்பர நிதிகள் ஆகும். இவைகள், உண்மையில் தங்கத்தைப் போலவே நல்ல வருமானத்தை அளித்துள்ளனவா அல்லது அதை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளனவா?
5 oldest gold ETFs in India: தங்க இ.டி.எஃப்.கள் அடிப்படையில் தங்கத்தின் விலைகளைக் கண்காணிக்கும் பரஸ்பர நிதிகள் ஆகும். இவைகள், உண்மையில் தங்கத்தைப் போலவே நல்ல வருமானத்தை அளித்துள்ளனவா அல்லது அதை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளனவா?
Published on: April 21, 2025 at 12:28 pm
இந்தியாவில் தங்கத்தின் விலைகள் 10 கிராமுக்கு ரூ.96,000 ஐத் தாண்டிவிட்டன. இதற்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் என பல உள்ளன. இந்நிலையில் இன்று (ஏப்.21 2025) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 ஆயிரத்தை கடந்துவிட்டது.
உலக அளவில் இந்த முன்னோடியில்லாத உயர்வுக்குப் பின்னால் பல பெரிய காரணங்கள் உள்ளன. இதில், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை முதன்மை காரணமாகும். மேலும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தீவிரமாக தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இந்தப் பொருளாதார உறுதியற்ற தன்மை ஆகியவை தங்கத்தின் பிரகாசத்தை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் தங்க இ.டி.எஃப் ஃபண்ட்கள்
1) நிப்பான் இந்தியா ETF தங்க பீஸ்
2007 மார்ச் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிதி, 12.44 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
2) UTI தங்கப் பரிமாற்ற வர்த்தக நிதி
2007ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இந்த நிதி தொடங்கப்பட்டது. இதில், 12.62 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளத.
3) கோடக் கோல்டு இ.டி.எஃப்
2007ஆம் ஆண்டு ஜுலை 27ஆம் தேதி இந்த நிதி தொடங்கப்பட்டது. இது 13.2 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
4) குவாண்டம் கோல்ட் ஃபண்ட்
2008ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இந்தப் ஃபண்ட் தொடங்கப்பட்டது. இது, 11.69 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
5) எஸ்.பி.ஐ கோல்ட் இ.டி.எஃப்
2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தப் ஃபண்ட் தொடங்கப்பட்டது. இது, 11.30 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க சவரனுக்கு ரூ. 560 வரை உயர்வு.. ரூ. 72 ஆயிரத்தை கடந்த தங்கம்.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com