Jan Dhan bank account: ஏப்ரல் 2025 நிலவரப்படி ஜன் தன் வைப்புத்தொகை ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது, சராசரியாக ஒரு கணக்கின் இருப்பு ரூ.4,760 ஆகும்.
Jan Dhan bank account: ஏப்ரல் 2025 நிலவரப்படி ஜன் தன் வைப்புத்தொகை ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது, சராசரியாக ஒரு கணக்கின் இருப்பு ரூ.4,760 ஆகும்.
Published on: April 21, 2025 at 10:57 am
புதுடெல்லி, ஏப்.21 2025: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) வங்கிக் கணக்குகளில் ஏப்ரல் 9, 2025 நிலவரப்படி, டெபாசிட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.63 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு கணக்கிற்கு சராசரியாக ரொக்க டெபாசிட் ரூ.4,760 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. பி.எம்.ஜே.டி.ஒய் (PMJDY) கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 552.8 மில்லியனாக உள்ளது.
மேலும், மொத்தம் 379.8 மில்லியன் ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் மொத்த இருப்பு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.2,34,997 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது, இது ரூ.2,63,145 கோடியாக உள்ளது. முன்னதாக, அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்காகவே இந்தக் கணக்குகள் பெரும்பாலும் திறக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வங்கிக் கணக்குகள், வங்கிச் சேவை இல்லாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் பூஜ்ஜிய இருப்பு வங்கிக் கணக்கைத் திறப்பதன் மூலம் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, ஆகஸ்ட் 28, 2014 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில், வங்கிச் சேவை இல்லாத ஒவ்வொரு பெரியவருக்கும் ஒரு அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு, ரூ.10,000 ஓவர் டிராஃப்ட் (OD) வரம்பு மற்றும் ரூ.2,00,000 வரை காப்பீடு ஆகியவை உள்ளன.
இதையும் படிங்க: ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி: 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி ரிட்டன்? எப்படி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com