Kesari Chapter 2 Box Office: கேசரி அத்தியாயம் 2 பாக்ஸ் ஆபிஸ் நாள் 2ம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில், நடிகர்கள் அக்ஷய் குமார், ஆர். மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Kesari Chapter 2 Box Office: கேசரி அத்தியாயம் 2 பாக்ஸ் ஆபிஸ் நாள் 2ம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில், நடிகர்கள் அக்ஷய் குமார், ஆர். மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Published on: April 20, 2025 at 2:56 pm
மும்பை, ஏப்.20 2025: நடிகர்கள் அக்ஷய் குமார், ஆர். மாதவன் நடித்துள்ள கேசரி அத்தியாயம் 2 படம், இரண்டாவது நாளில் வலுவான வசூலை நெருங்கியுள்ளது. இந்தப் படம், ஆரம்ப மதிப்பீடுகளின்படி ரூ. 9.50–10 கோடி வரை வருவாய் ஈட்டியதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.
இது முதல் நாளிலிருந்து 25%–35% அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இரண்டு நாள் மொத்த வசூல் தோராயமாக ரூ. 17.25 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் வார இறுதி நாள்களில் மொத்தமாக ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது.
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையின் அதிகம் அறியப்படாத நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட, கேசரி: அத்தியாயம் 2 – தி அன்டோல்ட் ஸ்டோரி உருவாகியுள்ளது.
இந்த படம் சனிக்கிழமை ரூ. 9.50 கோடியை வசூலித்தது, அதைத் தொடர்ந்து ரூ. 7.75 கோடி வசூலித்தது. இது சமீபத்திய நாள்களில் அக்ஷய் குமாரின் படங்களில் அதிகப்பட்ச வசூல் ஆகும். மேலும், இந்தப் படம் இந்தி மொழியில் அதிகப்பட்சமாக வசூலை பதிவு செய்துள்ளது.
கேசரி அத்தியாயம் 2, 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சுற்றியுள்ள துயர நிகழ்வுகளை சித்திகரிக்கிறது. இந்தப் படத்தில், அக்ஷய் குமார், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை நீதிமன்றத்தில் சவால் செய்து உண்மையைச் சொல்லக் கோரி சி. சங்கரன் நாயராக நடித்துள்ளார்.
தொடர்ந்து, ஆர். மாதவன் வழக்கறிஞர் நெவில் மெக்கின்லி வேடத்திலும், அனன்யா பாண்டே பத்திரிகையாளர் தில்ரீத் கில்லை வேடத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கலெக்ஷனில் டபுள் செஞ்சூரி.. குட் பேட் அக்லி 9ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com