Dr. Ramadoss Easter wishes: இருள் விரைவாக நீங்கும் என பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Dr. Ramadoss Easter wishes: இருள் விரைவாக நீங்கும் என பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Published on: April 19, 2025 at 11:30 pm
சென்னை, ஏப்.19 2025: “அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், “ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்.
அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வு தான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : குலத் தொழிலை ஊக்குவிக்கும் விஷ்வகர்மா.. மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com