Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published on: April 17, 2025 at 7:38 pm
Updated on: April 17, 2025 at 7:43 pm
சென்னை ஏப்ரல் 17 2025: பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று (ஏப்ரல் 17 2025) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக அதிமுக கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர் நயினார் ராஜேந்திரன், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் என்ன முடிவு செய்கிறார்களோ அது நடக்கும்” என்றார்.
தொடர்ந்து, “தேவையில்லாமல் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி இந்த கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள்” என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி நோக்கம்
இதை எடுத்து அதிமுக பாஜக கூட்டணி நோக்கம் குறித்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன், “எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” என்றார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சென்னை வருகையின் போது அதிமுக உடனான கூட்டணியை உறுதிப்படுத்தினார். முன்னதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாற்றப்பட்டார். முந்தைய தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக, நயினார் நாகேந்திரன் கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு: நடிகர் விஜய் அறிக்கை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com