‘காயத்தோடு போராடுகிறேன், கடின உழைப்பு தேவை’: மேக்ஸ்வெல்

Glenn Maxwell | காயத்தோடு போராடுகிறேன், இன்னமும் கடின உழைப்பு தேவை என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Published on: August 30, 2024 at 11:17 pm

Glenn Maxwell | 2022 ஆம் ஆண்டில் T20 உலகக் கோப்பை போட்டியின் லீக் கட்டத்தை முடித்த பிறகு, மேக்ஸ்வெல் தனது நண்பரின் பிறந்த நாளில் நடந்த நிகழ்வில் கடுமையான காயம் அடைந்தார்.
இதில், அவரது இடது காலில் ஃபைபுலா மற்றும் சிப்பிங் டிபியா உடைந்ததாகவும், கணுக்கால் தசைநார்கள் சிதைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேக்ஸ்வெல், 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய சுற்றுப்பயணத்திற்கு பங்கேற்கவில்லை. ஆனால் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்தார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா இலங்கைக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் போது, மேக்ஸ்வெல்லின் டெஸ்ட் உடற்தகுதி குறித்த சந்தேகங்கள் உள்ளன.

இது குறித்து பேசிய மேக்ஸ்வெல், “ஒரு முழு நாள் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியை நான் உறுதி செய்யவேண்டும், இதற்காக ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறேன்” என்றார்.
மேலும், 2017 முதல் மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை, மற்றும் 2019 முடிவில் முதல் தர கிரிக்கெட்டில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து பேசிய மேக்ஸ்வெல், “”நான் முழுமையாக நலமாக இருப்பதாக நம்புகிறேன், ஆனால் மேலும் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.

இதையும் படிங்க யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால சாதனை; ஒரே ஓவரில் முடித்த டேரியஸ் விஸ்ஸர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com