மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ பயணத்தில ரூ.900 கோடியை முதலீடாக ஈர்த்துள்ளார்.
February 6, 2025
மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ பயணத்தில ரூ.900 கோடியை முதலீடாக ஈர்த்துள்ளார்.
Published on: August 30, 2024 at 10:23 am
MK Stalin USA Tour | தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களை சந்தித்தார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின், “ரூ.900 கோடிக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதன்மூலம் 4100 பேருக்கு வேலை கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
அதன்படி,
🔹 நோக்கியா – ₹450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்
🔹 பேபால் – 1,000 வேலைகள்
🔹 ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் – ₹150 கோடி, 300 வேலைகள்
🔹 மைக்ரோசிப் – ₹250 கோடி, 1,500 வேலைகள்
🔹 Infinx – ₹50 கோடி, 700 வேலைகள்
🔹 அப்ளைடு மெட்டீரியல்ஸ் – 500 வேலைகள் கிடைக்கும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து, “இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின்; ஓடோடி வந்த நெப்போலியன்: உற்சாக வரவேற்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com