அண்ணாமலையை கலாய்த்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
அண்ணாமலையை கலாய்த்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
Published on: August 29, 2024 at 8:31 pm
Updated on: August 29, 2024 at 8:33 pm
Sellur Raju Twitter post | தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையின் வெளிநாட்டுப் பயணத்தை கிண்டலடிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பள்ளிக் கூடத்தில் ஆடுகள் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!! pic.twitter.com/hVJLYINzt4
— Sellur K Raju (@SellurKRajuoffl) August 29, 2024
இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அண்ணாமலை விவசாயின் மகன், கஷ்டப்பட்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றேன். இளமைக் காலத்தில் ஆடு மேய்த்துள்ளேன்” என பேட்டிகளில் கூறுவார்.
இந்த நிலையில் செல்லூர் ராஜூ இந்தப் வீடியோவை பகிர்ந்துள்ளார். அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் முற்றிக் காணப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை: தமிழக பா.ஜ.க.வில் அடுத்து என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com