செப்டம்பரில் தங்கம், வெள்ளி விலை குறையுமா? சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

Share Market News Today | இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Published on: August 29, 2024 at 7:18 pm

Share Market News Today | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 99.60 புள்ளிகள் அல்லது 0.40% அதிகரித்து 25,151.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 349.05 புள்ளிகள் அல்லது 0.43% உயர்ந்து 82,134.61 ஆகவும் காணப்பட்டது.

லார்ஜ்-கேப் பங்குகள் கலப்பு மண்டலத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 8.90 புள்ளிகள் அல்லது 0.02% அதிகரித்து 51,152.75 ஆக முடிந்தது. ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் உலோகம் மற்றும் பார்மா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பிபிசிஎல் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 5o குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் கிராசிம், மஹிந்திரா & மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்ட்ரீல் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை பின்தங்கின.

இதையும் படிங்க: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-536: முதல் பரிசு ரூ.80 லட்சம் அறிவிப்பு

தங்கம் விலை நிலவரம்

ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.71,600 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,160 ஆக காணப்பட்டது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,633 ஆக இருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 0.5% உயர்ந்துள்ளது. ஆக, கடந்த 10 தினங்களில் மஞ்சள் உலோகமான தங்கம் 0.02% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது கிலோவுக்கு ரூ.84,200 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில், 10 கிராம் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 29ஆம் தேதி ரூ.72,010 ஆக காணப்பட்டது. கடந்த வாரம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 10 கிராம் தங்கம் ரூ.71,430 ஆக காணப்பட்டது.

சென்னையில் வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளியின் விலை கிலோ ரூ.84,450 ஆகும். அதுவே, நேற்று (ஆக.29) வெள்ளியின் விலை கிலோ ரூ.86,200 ஆகவும், கடந்த வாரம் 22ஆம் தேதியன்று கிலோ ரூ.84,120 ஆகவும் காணப்பட்டது.

எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 காலாவதியுடன் தங்க எம்.சி.எஸ் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு 0.27% அதிகரித்து ரூ.71,935 ஆக காணப்பட்டன. மேலும், எம்.சி.எஸ் ஃப்யூச்சர்களில் செப்டம்பர் 2024ல் எதிர்கால ஒப்பந்தங்கள் 0.52% அதிகரித்து ஒரு கிலோவுக்கு ரூ.84,410-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com