BJP MLA’s ‘ban non-Hindus’ at Kedarnath remark: கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களைத் தடை செய்ய வேண்டும் என்ற உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
BJP MLA’s ‘ban non-Hindus’ at Kedarnath remark: கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களைத் தடை செய்ய வேண்டும் என்ற உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on: March 16, 2025 at 5:52 pm
புதுடெல்லி, மார்ச் 16, 2025: கேதார்நாத் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தராகண்ட் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ ஆஷா நௌடியல் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசுகையில், இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக குற்றஞசாட்டினார். இதற்கு பதிலளித்த உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பாஜக தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையில், சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30 ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று தொடங்குகிறது. அப்போது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாம்களின் கதவுகள் திறக்கப்படும். இந்த நிலையில், கேதார்நாத் தாம் வாயில்கள் மே 2 ஆம் தேதியும், பத்ரிநாத் தாம் வாயில்கள் மே 4 ஆம் தேதியும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பஞ்சாப்பில் சிவசேனா பிரமுகர் சுட்டுக் கொலை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com