WhatsApp: போன் நம்பரை பதியாமல் வாட்ஸ்அப் கால் செய்வது எப்படி? இதை ஃபாலோ பண்ணுங்க!

WhatsApp call without saving the number: ஒருவரின் போன் நம்பரை பதிவு செய்யாமல், அவருக்கு வாட்ஸ்அப் கால் செய்வது எப்படி?

Published on: March 16, 2025 at 1:38 pm

உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்துகின்றனர். இதுவரை 3.5 பில்லியனுக்கும் அதிகமானோர் இதனை டவுன்லோட் செய்துள்ளனர். இந்த செயலியில் வாய்ஸ் காலிங் வீடியோ காலிங் என அனைத்து வசதிகளும் உள்ளதால் மக்கள் பெரும்பாலும் இந்த தளத்தையே பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் செல்போனில் நாம் ஷேவ் செய்து வைத்த எண்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப்பில் கால் செய்யும் வசதி உள்ளது. புதிதாக யாருக்கும் கால் செய்ய வேண்டும் என்றால் அந்த நம்பரை கான்டக்டில் பதிவு செய்து விட்டு அதற்குப் பிறகுதான் கால் செய்ய முடியும்.

இதனை வாட்ஸ் அப் பயனாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிதாக ஒருவரின் நம்பரை சேவ் செய்யாமலேயே வாட்ஸ் அப்பில் கால் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரணமாக செல்போனில் டயல் பேடில் கால் செய்வது போல் வாட்ஸ்அப்பிலும் புதிய எங்களுக்கு கால் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் அதன் தளத்தை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒருவரின் நம்பரை சேவ் செய்யாமலேயே வாட்ஸப்பில் கால் செய்யும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

இந்த சேவை ஒருமுறை மட்டுமே கால் செய்ய வேண்டிய வணிக தொடர்பான அழைப்புகள், தற்காலிகமாக டெலிவரி சேவை போன்ற தொடர்புகள் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும்.

புதிதாக நம்பரை சேவ் செய்யாமல் வாட்ஸ்அப் கால் செய்வது எப்படி?

  • உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.
  • ஸ்கிரீனின் அடிப்பகுதியில் உள்ள ‘கால்ஸ்’ பகுதிக்குச் செல்லவும்.
  • மேல் வலது மூலையில் உள்ள ‘+’ (பிளஸ்) ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • அதில் 3 ஆப்ஷன்ஸ் இருக்கும்
  • புதிய அழைப்பு இணைப்பு(New Call Link)
  • ஒரு எண்ணை அழைக்கவும்(Call a Number)
  • புதிய தொடர்பு (New Contact)
  • ‘ஒரு எண்ணை அழைக்கவும்’ என்பதை டேப் செய்ததும் டயலர் பேட் தோன்றும்.
  • கால் செய்ய வேண்டிய எண்ணை டயல் பேடில் டைப் செய்து கால் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

இப்போது புதிய நம்பரை சேவ் செய்யாமலே வாட்ஸ்அப்பில் கால் செய்யலாம்.

இதையும் படிங்க இந்தியா டாப்.. 1 கோடி வீடியோக்களை நீக்கிய யூ-ட்யூப்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com