IIT Baba Abhay singh Mark Sheet: ஐஐடி பாபா அபய் சிங்கின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
IIT Baba Abhay singh Mark Sheet: ஐஐடி பாபா அபய் சிங்கின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Published on: March 11, 2025 at 4:41 pm
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி , பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்பமேளா நிகழ்வுடன் நிறைவு பெற்றது. இந்த மகா கும்பமேளா நிகழ்வில் சிலருக்கு திடீர் புகழ்கள் தேடி வந்தன.
அந்த வகையில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஐஐடி பாபா. இவர் ஐஐடியில் கல்வி பயின்றவர் ஆவார். பின் நாட்களில் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காரணமாக துறவறம் கொண்டார். தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சுற்றி திரிந்து இறைவனை வழிபட்டு வருகிறார்.
இவர் அண்மையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்; கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இவர் தங்கியிருந்தபோது இவரிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஐஐடி பாபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஐஐடி பாபா கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீ போல் பரவின.
இதுகுறித்து மறுப்பு தெரிவித்த ஐஐடி பாபா, தன்னிடம் சிறிய அளவில் கஞ்சா இருந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்ட நிலையில் தான் கைது எதுவும் செய்யப்படவில்லை. பொதுவாக சாமியார்கள் சிறிய அளவில் கஞ்சா புகைப்பார்கள் என்றார். ஐஐடி பாபாவின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஐஐடி பாபாவின் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. படிப்பை பொருத்தமட்டில் ஐஐடி பாபா மிகமிக கெட்டிக்காரராக திகழ்ந்துள்ளார். அவர் பத்தாம் வகுப்பில் 93 சதவீத மதிப்பெனும் பன்னிரண்டாம் வகுப்பில் 92.50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: நான் கஞ்சா புகைப்பேன்.. சர்ச்சையில் சிக்கிய ஐஐடி பாபா.. வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com