Complaint filed against Vijay: இப்தார் நோன்பு விவகாரத்தில் நடிகர் விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.
Complaint filed against Vijay: இப்தார் நோன்பு விவகாரத்தில் நடிகர் விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.
Published on: March 11, 2025 at 4:22 pm
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சியின் சார்பில் அண்மையில் சென்னையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தி அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.
இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த நிலையில் நடிகர் விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் நடிகர் விஜய் இஃப்தார் நோன்பு திறப்பின் போது, இஸ்லாமியர்களை அவமதிப்பு செய்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இஸ்லாமிய மதத்தின் மதிப்புகளும் இந்த நிகழ்ச்சியின் போது அவமதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் தனது மதிப்பை பெருக்கிக் கொள்ள கலந்து கொண்டார்; ஆனால் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது ஜனநாயகம் என பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை தொடங்கியுள்ள நிலையில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் இது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவன் தான் தீர்மானிக்க வேண்டும்.. சரத்குமார் பரபரப்பு கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com