தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாதபடி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாதபடி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
Published on: March 9, 2025 at 10:57 pm
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று (மார்ச் 9 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாதபடி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எல் முருகன், “2026 இல் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக மீனவர்களின் பிரச்சனை குறித்து பேசிய எல் முருகன், இந்த விவகாரத்தில் இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றார். மேலும் மீனவர்களின் நலனுக்காக தனியாக அமைச்சகம் கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி தான் என்பதையும் வேல்முருகன் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதிகமாக பெருமை சேர்த்தது பாரதிய ஜனதா கட்சி தான் என கூறிய எல் முருகன், உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் தான் என பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் பேசுகிறார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காங்கிரசும் திமுகவும் தான்; இதனை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி” என்றார்.
இதையும் படிங்க 2026-ல் தி.மு.க ஆட்சியை மாற்றுவோம்.. விஜய் மகளிர் தின வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com