ICC Champions Trophy 2025: துபாயில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கனே வில்லியம்சனை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
ICC Champions Trophy 2025: துபாயில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கனே வில்லியம்சனை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
Published on: March 9, 2025 at 10:36 pm
Updated on: March 9, 2025 at 11:10 pm
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று (மார்ச் 9, 2025) சந்தித்தன. இந்த கிரிக்கெட் போட்டிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியின் போது, காயமடைந்ததால், கேன் வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸில் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால், கேன் வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. வில்லியம்சன் சிறந்த ஃபார்மில் உள்ளார், துபாயில் நடந்து வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன. ஏற்கனவே அவர் இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் எடுத்து இருந்தார். மேலும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார்.
SOFT DISMISSAL! 🎯#KuldeepYadav gets the big wicket of #KaneWilliamson, who spoons it back for an easy grab! 💥 Loud cheers, big celebrations—India on top! 🇮🇳🔥#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 &… pic.twitter.com/U8zqp7Qu22
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் வெளியேறிய பிறகு முற்றிலும் ஏமாற்றமடைந்தார். திரும்பிப் பார்க்கும்போது விரக்தியுடன் தலையை ஆட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குண்டான ரோஹித் சர்மா.. விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி.. பி.சி.சி.ஐ கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com