International Women’s Day 2025: சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச், 8, 2025) டெல்லி அரசின் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்து பார்க்கலாம்.
International Women’s Day 2025: சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச், 8, 2025) டெல்லி அரசின் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்து பார்க்கலாம்.
Published on: March 8, 2025 at 7:53 am
புதுடெல்லி, மார்ச் 8, 2025: டெல்லி பா.ஜ.க. அரசு பெண்களுக்கு மகிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.3 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட மகளிருக்கு இந்தத் திட்டம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலமாக தேசிய தலைநகரில் 15-20 லட்சம் வரை மகளிர் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிளா சம்ரித்தி யோஜனா: எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தில் பெண்கள் பதிவு செய்ய, டெல்லி மாநில அரசு பிரத்யேக போர்ட்டலை உருவாக்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக பல்வேறு தரவுகளையும் மாநில அரசு துறைகளிடம் அரசு கோரியுள்ளது. இந்த ரூ.2500 மகளிர் சம்ரித்தி திட்டம் ஆண்டு வீட்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்களுக்கும், வரி செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த நிதி உதவியும் பெறாத பெண்களும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.5 லட்சம் ரிட்டன்.. டாப் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com