Actress Samantha: நடிகை சமந்தா தான் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த மூன்று நாட்கள் அவர் எதை தவிர்த்தார் என்பது தெரியுமா?
Actress Samantha: நடிகை சமந்தா தான் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த மூன்று நாட்கள் அவர் எதை தவிர்த்தார் என்பது தெரியுமா?
Published on: February 23, 2025 at 8:40 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சமந்தா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் உண்டு. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இவருக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் காதல் ஏற்பட்டது. இந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும், யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். நாக சைதன்யா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பெரிய திரை மட்டுமல்லாது, வெப் சீரிஸ் களிலும் நடிகை சமந்தா நடித்து வருகிறார். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் ஒன்று இந்திய அளவில் ஹாட் டாபிக் ஆனது. இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தா மிகவும் போல்டான பெண்ணாக நடித்திருப்பார். இந்த வெப் சீரியஸ் இலங்கை தமிழர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
OTT-க்கு வந்த லால் சலாம்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
அதன் பின்னர் நடிகை சமந்தா தற்போது பெரிய திரை மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் மயோசிட்டிஸ் என்ற ஓர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.
இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொதுவெளியில் தோன்றுவதை அவர் தவிர்த்து வந்தார். மேலும் ஆன்மீக ரீதியாகவும் நடிகை சமந்தா கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா மூன்று நாட்கள் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருந்த தனது நிலையை விவரித்துள்ளார். இதுகுறித்து பேசி உள்ள நடிகை சமந்தா, ” நான் மூன்று நாட்கள் தொலைபேசியை பயன்படுத்தவே இல்லை; இந்த மூன்று நாட்களும் நான் மிகவும் அமைதியாக உணர்ந்தேன்.
உண்மையை சொல்வதென்றால் நான் யாரிடமும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை; என்னோடு நான் தொடர்பில் இருந்தேன். தனியாக தனிமையில் இருப்பது கடினமானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த நிலை கடினமானது மற்றும் பயங்கரமானது. ஆனாலும் நான் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com