Lal Salaam OTT Release Date: லால் சலாம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Lal Salaam OTT Release Date: லால் சலாம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Published on: February 22, 2025 at 7:17 pm
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் இடையே சிறந்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லால் சலாம் திரைப்படம் ஓராண்டுக்குப் பிறகு தற்போது ஓ.டி.டி இல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியான போது ரூ. 31.25 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. கிரிக்கெட் மற்றும் மதக்கலவரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கதையில் ரசிகர்களிடையே எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது. இந்நிலையில் லால்சலாம் படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஓடிபி ரிலீஸ் தேதி குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் லிவிங்ஸ்டனின் மகன்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். மகன்கள் இருவருக்கும் இடையே உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மோதல் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி அரசியல்வாதிகள் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வரவிருக்கும் தேர்தலில் லாபம் பெற நினைக்கின்றனர் என்ற நோக்கில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, ஜீவிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க பாட்டு பட்டைய கிளப்பப்போகுது.. மீண்டும் அனிருத் – தனுஷ்
கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com