BSNL Recharge Plan: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சமீப காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான புதிய சலுகைகளை வழங்கி வருகிறது.
BSNL Recharge Plan: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சமீப காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான புதிய சலுகைகளை வழங்கி வருகிறது.
Published on: February 15, 2025 at 10:06 pm
டிராய்(TRAI)-யின் சமீபத்திய வழிகாட்டுதல்களுக்குப் பிறகு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா தேவையில்லாத பயனர்களுக்கும் உதவும் வகையில் புதிய காலிங் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் உள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தின.
இதற்கு முன்பு இது போன்ற குறிப்பிட்ட தேவைக்கான திட்டங்கள் இல்லாததால் பயனர்கள் அனைத்து சேவைகளும் அடங்கிய தொகுக்கப்பட்ட திட்டங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் இந்த வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் உள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தின. ஆனால் பலரும் அவற்றின் விலை மிக அதிகம் என்று கருதுகின்றனர்.
ஆனால், எப்போதும் வாய்ஸ் திட்டங்களை வழங்கி வரும் பிஎஸ்என்எல், டிராய் உந்துதலுக்குப் பிறகு புதிய கவனத்தைப் பெற்றுள்ளது.
பி.எஸ்.என்.எல். மலிவு விலை திட்டம்
பிஎஸ்என்எல்-இன் ரூ.439 திட்டம் மிகவும் மலிவு விலையில் உள்ளது. இத்திட்டம் 90 நாட்களுக்கு சேவையை வழங்குகறிது. மேலும் இதில் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
இதேபோன்ற ஜியோவின் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-மட்டும் அடங்கிய திட்டத்தின் விலை ரூ.448 ஆகும். ஆனால் இது 84 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதேவேளையில் ஜியோ ரூ.1748-க்கு நீண்ட கால திட்டத்தையும் வழங்குகிறது. 336 நாட்கள் செல்லுபடியாகும்.
ஏர்டெல்லின் திட்டங்கள் பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ இரண்டையும் விட விலை அதிகம். ஏர்டெல்லின் இத்திட்டத்தின் விலை ரூ.469 ஆகும். மேலும் இது 84 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே நேரத்தில் அதன் ரூ.1849 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
வோடபோனின் இத்திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ. 470க்கு வழங்கப்படுகிறது. இது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 900 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
வோடபோனின் நீண்ட கால திட்டம், ரூ. 1460 விலையில், 270 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க ரூ.20 போதும்.. உங்கள் சிம் கார்டுகள் டிஆக்டிவேட் ஆகாமல் தடுப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com