High return post office scheme : நாம் பார்க்க போகும் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில், ₹.1,000 முதல் முதலீடு செய்து ₹.1 லட்சம் வரை ரிட்டன் பெறலாம்.
High return post office scheme : நாம் பார்க்க போகும் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில், ₹.1,000 முதல் முதலீடு செய்து ₹.1 லட்சம் வரை ரிட்டன் பெறலாம்.
Published on: February 15, 2025 at 8:18 pm
பணத்தை சேமிக்க விரும்பும் நடுத்தர குடும்பத்தினருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களை பயன்படுத்தி பணத்தை சேமிப்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியும் சிறந்த தொகை கிடைக்கும். இவை எதிர்கால தேவைகளுக்கு பெரிதும் உதவும். அத்தகைய சிறந்த திட்டங்களில் தபால் அலுவலக ஆர்.டி.(தொடர் வைப்புத்தொகை) திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கோடீஸ்வரராகலாம்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம், நீங்கள் ரூ. 1 லட்சம் வரை சேமிக்கலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இந்த தபால் அலுவலகத் திட்டத்தில், ரூ. 100 செலுத்தி ஒரு கணக்கைத் தொடங்கலாம். ஆர்.டி. திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம்.
மைனர் பெயரிலும் இந்த கணக்கைத் தொடங்கலாம். ஆனால் பெற்றோர்கள் தங்கள் விவரங்களையும் தேவையான ஆவணங்களையும் வழங்க வேண்டும். சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் இந்த முதலீட்டுக்கு பெரிய தொகை எதுவும் தேவையில்லை.
உங்கள் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம். இதன்மூலம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க தொகை கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.60,000 டெபாசிட் செய்வீர்கள்.5 ஆண்டு முடிவில் இதனை முடிக்கும்போது 6.7% வட்டி விகிதத்தில், நீங்கள் ரூ.11,369 வட்டியைப் பெறுவீர்கள்.
இதன் மூலம் உங்கள் மொத்த நிதி ரூ.71,369 ஆகும். நீங்கள் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
அதே விகிதத்தில் ரூ. 50,857 வட்டியுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த நிதி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 857 ஆகும்.
இந்தத் திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் தொடங்கலாம்.
நீங்கள் உங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம். மேலும் அவர்கள் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்களே அதை இயக்கலாம். கூடுதலாக, மூன்று பேர் வரை கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.
இதையும் படிங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி; தங்கம் ரூ. 800 வரை குறைவு; இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com