Ajith Kumar car accident: போர்க்சுக்கலில் கார் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Ajith Kumar car accident: போர்க்சுக்கலில் கார் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: February 9, 2025 at 12:59 pm
Updated on: February 9, 2025 at 1:06 pm
போர்க்சுக்கலில் நடிகர் அஜித் குமார் கார் விபத்து: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் இவரது அணி 3ம் இடத்தை பிடித்து அசத்தியது.
இந்த நிலையில், தற்போது அடுத்தக் கட்ட பயிற்சிக்காக அஜித் குமார் போர்க்சுக்கலில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. எனினும், அஜித் குமார் தற்போது நலமுடன் உள்ளார்.
இது குறித்து அஜித் குமார், எனது ரசிகர்கள் மட்டுமின்றி நான் என்ன செய்கிறேன் என அறிய விரும்பும் அனைவருக்கும் நன்றி. போர்க்சுக்கலில் இன்றைய பயிற்சியின் போது எனது கார் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான எனது காரை மெக்கானிக்குகள் சரி செய்து விட்டனர். அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். துபாய் ரேஸ் பயிற்சியின் போது அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது.
அதன் பின்னர் நடந்த போட்டியில் அவர் 3வது இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எவ்வளவு பெரிய சாதனை; அஜித் குமாருக்கு பாராட்டு விழா: யோகி பாபு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com