பழம்பெரும் மலையாள நடிகை மீனா கணேஷ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச.20, 2024) மரணம் அடைந்தார்.
பழம்பெரும் மலையாள நடிகை மீனா கணேஷ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச.20, 2024) மரணம் அடைந்தார்.
Published on: December 20, 2024 at 12:38 pm
Meena Ganesh passes away | கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை மீனா கணேஷ் தற்போது நம்முடன் இல்லை. அவருக்கு வயது 81.
இந்நிலையில், ஃபெஃப்கா பொதுச் செயலாளர் பி.உன்னிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த நடிகை தனது நீண்ட நடிப்பு வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்கள், 25 தொடர்கள் மற்றும் பல நாடகங்களில் நடித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நடிகை மீனா 1976 ஆம் ஆண்டு பி ஏ பேக்கரின் மணிமுழக்கம் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, நந்தனம், மீஷாமாதவன் மற்றும் கருமாடிக்குட்டான் போன்ற படங்களில் நடித்தார். இவரின் நடிப்பில், எவிடம் ஸ்வர்கமானு, தி ரிப்போர்ட்டர், இதினுமாபுரம், மரியம் முக்கு, ஆரஞ்ச் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com