இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ள இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Published on: December 14, 2024 at 1:41 pm

Updated on: December 14, 2024 at 1:42 pm

Mythology | இந்தியாவில் இரண்டு கோவில்களில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் வெங்கலம், ஐம்பொன், கற்களால் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை மற்றும் பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

பூம்பாறை கிராமம் கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும் என்று நம்பப்படுகிறது. உலகிலேயே நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற சித்தர் ஆவார். இவர் பழனி மலை முருகன் சிலை மற்றும் பூம்பாறை முருகன் சிலையையும் நவபாஷானத்தால் உருவாக்கினார்.

பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது இறுதியாக வந்த வனம் பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும். பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலையில் பிரதிஷ்டை செய்தார். அச்சிலை தண்டம் கொண்டு உருவாக்கப்பட்டதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர். அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்டச் செய்தார் என்ற வரலாறு உண்டு.

பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் நவபாஷான சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை இங்குள்ள திருமண மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்தார். அருணகிரி நாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசனம் செய்ய வந்த போது இரவு நேரமாக இருந்ததால் கோவில் மண்டபத்தில் படுத்து தூங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரி நாதரை கொல்ல வந்தார். அப்போது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாள்.

தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரி நாதர் இத்தல முருகனை `குழந்தை வேலர்’ என்று அழைத்தார். அந்த பெயரே காலப்போக்கில் முருகனுக்கு நிலைத்து நின்றது. இங்கு முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீர்ந்து முருக பெருமானின் முழு அருளும் கிடைக்கும் என்று பக்தர்களால் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க. காவல் காக்கும் கருப்பண்ண சாமி.. சபரிமலை செல்லும்முன் தேங்காய் உடைக்க காரணம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com