டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
Published on: December 8, 2024 at 8:29 pm
Updated on: December 8, 2024 at 8:44 pm
New Delhi | டெல்லி- என்.சி.ஆர் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது, கடுமையான காற்று மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளித்தது. மேலும், தேசிய தலைநகரில் குளிர்காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் மழை பெய்துள்ளது எனவும் கூறப்படுகிறது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் குளிர் கடுமையாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
அந்த வகையில், டெல்லியில் வரும் நாட்களில் கடும் குளிர் நிலவும் என்பதை உணர்த்தும் வகையில் மழை பெய்துள்ளது. முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியில் உள்பட வடமாநிலங்களில் டிச.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என முன்னறிவித்து இருந்தது.
மேலும், டிசம்பர் 8 ஆம் தேதி பெரும்பாலும் மேகமூட்டமான வானம் லேசான மழை அல்லது தூறல் இருக்கும் என்று தெரிவித்து இருந்தது. இதற்கிடையில், அதிகாலை மூடு பனி நிலவும் எனவும் குளிர் வரும் நாள்களில் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com