திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது.

Published on: November 28, 2024 at 3:15 pm
Tiruchanur | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோவில் நேற்று முன்தினம் (26ஆம் தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை நடைபெற்றது. அதன் பின் அங்குரார்ப்பணம் நடந்தது. விழாவை முன்னிட்டு, திருச்சானூர் மற்றும் திருப்பதி நகரங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலையும் இரவும் பத்மாவதி தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இன்று இரவு 7 மணிக்கு சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
தேரோட்டம் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் டிசம்பர் ஆறாம் தேதி நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு டிசம்பர் எட்டாம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க சபரிமலை நடை திறப்பு ; பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com