2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்த இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்களை டேரியஸ் விஸ்ஸர் என்ற கிரிக்கெட்டர் முறியடித்துள்ளார். சமோவா நாட்டின் விக்கெட் கீப்பர் பேட்டர் டேரியஸ் விஸ்ஸர், ஆண்கள் டி20யில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதிச் சுற்று ஏ நிகழ்வில் வனுவாட்டுக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்டர் டேரியஸ் விஸ்ஸர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது, தகுதிச்சுற்றின் போட்டியின் 15வது ஓவரில், விஸ்ஸர் 6 சிக்ஸர்களை விளாசினார். இந்த ஓவரில் 3 நோ-பால்களும் வீசப்பட்டன. இதன்மூலம், 2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்களை குவித்த இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்களை அவர் முறியடித்தார். செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h