திமுக ஆட்சியில் நடக்கும் லாக்கப் மரணங்களுக்கு எப்போது பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் நடக்கும் லாக்கப் மரணங்களுக்கு எப்போது பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: November 25, 2024 at 2:45 pm
EPS Strongly Condemns DMK Gov | எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை; மறுபுறம் காவல் நிலைய மரணங்கள் என்பதும் தொடர்கதையாகி உள்ளது.
சென்னையில் நடந்த விக்னேஷ் (எ) விக்னா காவல் நிலைய மரணத்தின் போது நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போதே, பச்சைப்பொய் பேசியவர் தான் இன்றைய முதல்வர்.
காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை திமுக அரசு அதன் அதிகாரத்தைக் கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்திற்குரியது.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்திற்கு உட்பட்டு கழக ஆட்சி செயல்பட்ட போதும், “மனித உரிமை” என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய மு.க. ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com