இந்த விசாரணைகள் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய அமைதியின்மையை மையமாகக் கொண்டுள்ளன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
இந்த விசாரணைகள் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய அமைதியின்மையை மையமாகக் கொண்டுள்ளன.
Published on: August 19, 2024 at 5:24 pm
Updated on: August 28, 2024 at 8:06 pm
வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவால் நிறுவப்பட்ட தீர்ப்பாயம், அவர் மீது சுமத்தப்பட்ட படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஒரு மாதப் போராட்டத்தின் போது 450க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி ஆகஸ்ட் 5 அன்று இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
தீர்ப்பாயத்தின் புலனாய்வாளரின் கூற்றுப்படி, இந்த விசாரணைகள் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய அமைதியின்மையை மையமாகக் கொண்டுள்ளன.
வங்காளதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), 2010 இல் ஹசீனாவால் நிறுவப்பட்டது, பாகிஸ்தானுக்கு எதிரான நாட்டின் விடுதலைப் போரின் கொடுமைகளை விசாரிக்கிறது. ஹசீனாவின் தலைமையின் கீழ், பல அரசியல் எதிரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com