Charlie Kirk: அமெரிக்காவில் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
Charlie Kirk: அமெரிக்காவில் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

Published on: September 12, 2025 at 11:12 am
நியூயார்க், செப்.12 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லஸ் கிரிக். இவர், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
சார்லஸ் கிர்கியின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரின் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டு பாய்ந்தது காண்போர் நெஞ்சை உறைய செய்யும் வகையில் இருந்தது.
இந்த நிலையில், சார்லி கிர்க்கைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட போல்ட்-ஆக்சன் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை (செப்.11, 2025) தெரிவித்தனர். இதற்கிடையில், கல்லூரி வயதுடையவராகத் தோன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியும், இளம் வாக்காளர்களிடையே குடியரசுக் கட்சி ஆதரவை அதிகரிப்பதில் பெயர் பெற்றவருமான 31 வயதான பாட்காஸ்ட் மற்றும் வானொலி வர்ணனையாளரான கிர்க் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை ஒரு அரசியல் படுகொலை என்று உட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் செப்.10ஆம் தேதி பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் டிரம்ப் ஆதரவாளருமான சார்லி கிர்க் என்பவர் ஓரெம், உட்டா பல்கலை நிகழ்வில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். #CharlieKirk #America pic.twitter.com/5wzsMvoLBu
— Dravidan Times (@DravidanTimes) September 11, 2025
அதாவது, உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000 பேர் கொண்ட பார்வையாளர்களுக்கு முன்பாக, “நான் தவறாக இருந்தால் நிரூபிக்கவும்” என்ற வெளிப்புற நிகழ்வில் கிர்க் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து, உட்டா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ், கிர்க்கின் வளாக நிகழ்வுகள் நீண்டகால சுதந்திர அரசியல் சொற்பொழிவு மரபின் ஒரு பகுதியாகும் என்றார்.
மேலும், இது “நமது நாட்டின் உருவாக்கத்திற்கும், நமது மிக அடிப்படையான அரசியலமைப்பு உரிமைகளுக்கும் அடித்தளமாக உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து, “யாராவது ஒருவரின் கருத்துக்கள் அல்லது அவர்களின் இலட்சியங்களுக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கும்போது, அந்த அரசியலமைப்பு அடித்தளமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது” என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணி தவிப்பு; வைரல் வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com