Bangladesh on unrest: வங்கதேசத்தில் அமைதியின்மை தொடர்கிறது; இந்திய தூதரை வங்கதேசம் அழைத்துள்ளது. 20 தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Bangladesh on unrest: வங்கதேசத்தில் அமைதியின்மை தொடர்கிறது; இந்திய தூதரை வங்கதேசம் அழைத்துள்ளது. 20 தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Published on: December 23, 2025 at 2:58 pm
டாக்கா, டிச.23, 2025: வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் உஸ்மான் ஹாடி, மற்றொரு தலைவர் மொத்தலேப் சிக்தார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, 20 அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில், ஷரீஃப் உஸ்மான் ஹாடி மாணவர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். அவர் கடந்த வாரம் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தேசிய குடிமக்கள் கட்சி (National Citizen Party – NCP) பிரிவு தலைவர் மொத்தலேப் சிக்தார், குல்னா நகரில் தலையில் சுடப்பட்டு கடுமையாக காயமடைந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவங்கள் வங்கதேசத்தில் பரவலான அமைதியின்மை மற்றும் போராட்டங்களை தூண்டியுள்ளன. இதனால் அந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது.
மேலும், சமீபத்திய இந்த சம்பவங்கள், மாணவர் இயக்கங்கள், ஊடக சுதந்திரம், மற்றும் அரசியல் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு, தலைவர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், மாணவர் இயக்கங்கள் மீண்டும் தீவிரமடைந்து, அரசியல் நிலைமை சிக்கலானதாக மாறியுள்ளது. இதற்கிடையில், ஹாடி சேர்ந்திருந்த இன்கிலாப் மொன்சோ அமைப்பு, புதிய அரசாங்கத்தை எதிர்த்து இயக்கம் நடத்துவதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் “தவிர்க்க முடியாத சூழ்நிலை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரை அழைத்துள்ளது.
இதையும் படிங்க : வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.. யார் இந்த ஷிக்தர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com