Muhammad Yunus: வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து அந்நாட்டின் இடைக்கால தலைவரான முகம்மது யூனுஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Muhammad Yunus: வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து அந்நாட்டின் இடைக்கால தலைவரான முகம்மது யூனுஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Published on: June 6, 2025 at 10:36 pm
Updated on: June 6, 2025 at 10:43 pm
டாக்கா, ஜூன் 6 2025: வங்க தேசத்தின் இடைக்காலத் தலைவரான முகம்மது யூனுஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 6 2025), வங்கதேச நாட்டில் ஏப்ரல் 2026 இல் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறினார். கடந்த ஆண்டு (2025) வெகுஜன எழுச்சி மூலமாக வங்கதேசத்தில் ஆளுங்கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
இதன் பின்னர் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். மேலும், அந்நாட்டின் இடைக்கால தலைவராக முகம்மது யூனுஸ் என்பவர் தேர்வானார். 86 வயதான இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
2026ல் பொதுத்தேர்தல்
இந்நிலையில், வங்கதேசத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இது குறித்து பேசிய அவர், “2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை நாட்டு மக்களுக்கு நான் அறிவிக்கிறேன்” என்றார்.
கடந்த ஆண்டு, வங்கதேசம் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் எழுச்சியைக் கண்டது, பரவலான போராட்டங்கள் ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தன, தற்போது அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் வலுப்பெறும் இந்திய- கனடா உறவு; மோடியை டெலிபோனில் தொடர்புக்கொண்ட பிரதமர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com