Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், ஈரான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.
Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், ஈரான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.
Published on: April 25, 2025 at 11:05 pm
தெஹ்ரான், ஏப்.25 2025: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்க தெஹ்ரான் உதவ தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இந்தியாவும் பாகிஸ்தானும் ஈரானின் சகோதர அண்டை நாடுகள், பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளில் உள்ளன.
மற்ற அண்டை நாடுகளைப் போலவே, நாங்கள் அவர்களை எங்கள் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுகிறோம்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ட்வீட்
India and Pakistan are brotherly neighbors of Iran, enjoying relations rooted in centuries-old cultural and civilizational ties. Like other neighbors, we consider them our foremost priority.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 25, 2025
Tehran stands ready to use its good offices in Islamabad and New Delhi to forge greater… pic.twitter.com/5XsZnEPg2D
மேலும், “பாரசீகக் கவிஞர் சாதி கற்பித்த மனப்பான்மைக்கு ஏற்ப, இந்த கடினமான நேரத்தில் புதுடெல்லி, இஸ்லாமாபாத் இடையே அதிக புரிதலை உருவாக்க தெஹ்ரான் தயாராக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் புகுந்து 2025 ஏப்.22ஆம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கன்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com