ஆறு மாதங்கள் கடும் போர் நடத்த முடியும்: அமெரிக்காவுக்கு ஈரான் பதில்

US-Israel Iran War : ஈரான் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு கடுமையான போரை நடத்த முடியும் என்று புரட்சிகர காவல்படை கூறியது.

Published on: March 8, 2026 at 1:55 pm

தெஹ்ரான், மார்ச் 08 2026: அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு கடுமையான போரை நடத்த முடியும் என்று ஈரான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8, 2026) கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானில் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தார். பதிலடியா ஈரானும் எதிர் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகளான துபாய், அபுதாபி, பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் மேலும் தீவிரமாகும். ஈரான் சராணாகதியடைவதே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து, “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் தற்போதைய நடவடிக்கைகளின் வேகத்தில் குறைந்தது 6 மாத காலம் கடுமையான போரை நடத்தும் திறன் கொண்டது” என்று காவல்படை செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்!

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி? Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com