இஸ்ரேல் பிரதமர் மாளிகையை குறி வைத்த ஈரான்.. பெஞ்சமின் நேதன்யாகு என்ன ஆனார்?

Iran attack on Netanyahu: இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகுவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது; அவரது நிலைமை ‘தெளிவாக இல்லை’ என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

Published on: March 2, 2026 at 7:38 pm

டெல் அவிவ், மார்ச் 2, 2026: இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகுவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது; அவரது நிலைமை ‘தெளிவாக இல்லை’ என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இது தொடர்பாக, ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) பொது தொடர்பு துறை, இஸ்ரேல் விமானப்படை தளபதி இருந்த இடத்தையும் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

அதாவது இன்று (திங்கட்கிழமை), ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போரின் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகத்தைத் தாக்கியதாகக் கூறியது. மேலும், இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்தை குறிவைத்ததுடன், இஸ்ரேல் விமானப்படை தளபதி இருந்த இடத்தையும் ஈரான் படைகள் தாக்கின என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஓமனில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் மரணம்.. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு!

இது தொடர்பாக காவல்படை ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “சயோனிஸ்ட் ஆட்சியின் குற்றவாளி பிரதமரின் அலுவலகமும், அந்த ஆட்சியின் விமானப்படை தளபதி தலைமையகமும் குறிவைக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், இந்த தாக்குதலில் ‘கைபர்’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நேதன்யாகுவின் நிலைமை தெளிவாக இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஆர்ஜிசி தலைமையகம் அழிப்பு: அமெரிக்க ராணுவம் தகவல்

ஓமனில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் மரணம்.. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு!
US Iran War

ஓமனில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் மரணம்.. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கிச்

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com