அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பி.ஹெச்டி மாணவி.. ரஞ்சனிக்கு நடந்தது என்ன?

Indian PhD student Ranjani Srinivasan: அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பி.ஹெச்டி மாணவி ரஞ்சனி அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

Published on: March 15, 2025 at 7:23 pm

இந்திய குடிமகனாளன ரஞ்சனி சீனிவாசன், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டப் படிப்பிற்காக F-1 மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றவர் ஆவார். இவர், “வன்முறை, பயங்கரவாதம் மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.

முன்னதாக, ரஞ்சனி ஸ்ரீனிவாசன் பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று கூறி அமெரிக்க வெளியுறவுத்துறை துறை 2025 மார்ச் 5ஆம் தேதி அவரது விசாவை ரத்து செய்தது. முன்னதாக, மார்ச் 11ஆம் தேதியன்று சீனிவாசன் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) ஹோம் செயலியைப் பயன்படுத்தி சுயமாக நாடு கடத்தப்பட விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க : இதுவே சரியான நேரம்: இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள்; பிரதமர் நரேந்திர மோடி

இந்த நிலையில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட கொலம்பியா மாணவிகளில் ஒருவர், CBP ஹோம் செயலி மற்றும் ICE ஐப் பயன்படுத்தி சுயமாக நாடு கடத்தப்பட்டதாக இன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களின் மையமாக மாறியது.இந்நிலையில், 3,000 க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து, இந்திய மாணவி விசா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விண்வெளியில் தவிக்கும் இரு உயிர்கள்.. திரும்ப வருவதில் மீண்டும் தாமதம் ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com