Sikh woman sexually assaulted in England: இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் இந்திய சீக்கியப் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sikh woman sexually assaulted in England: இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் இந்திய சீக்கியப் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: September 16, 2025 at 10:33 am
வெஸ்ட மிட்லாண்ட் (இங்கிலாந்து) செப்.16, 2025: இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை, 20 வயதுடைய பிரிட்டனில் பிறந்த சீக்கியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் 30 வயது இளைஞரை கைது செய்துள்ளது.
அதாவது, இங்கிலாந்தின் ஓல்ட்பரியில் இன ரீதியாக தூண்டப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்கும் அதிகாரிகள் இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை காலை டேம் ரோடு பகுதியில் நடந்துள்ளது.
இது குறித்து பேசிய சாண்ட்வெல் காவல்துறையின் துணைத் தலைவர் கிம் மாடில், “இது விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், மேலும் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு சமூகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்றார்.
மேலும், “விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் இதில் ஈடுபட்டிருக்கக்கூடிய அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.
எப்போது நடந்தது?
செப்டம்பர் 9 ஆம் தேதி, ஓல்ட்பரியில் உள்ள டேம் சாலை அருகே இந்த பிரிட்டிஷ் வம்சாவளி சீக்கியப் பெண் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல் நடந்துள்ளது. காலை 8.30 மணியளவில் ஒரு பூங்கா வழியாக நடந்து சென்றபோது இரண்டு வெள்ளையர்கள் அவரை துன்புறுத்தியுள்ளனர்.
மேலும், “நீ இந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல” என்றும் “உன் நாட்டிற்குத் திரும்பிப் போ” என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் இந்திய சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க : நேபாளத்துக்கு புதிதாக 3 அமைச்சர்கள்.. யார் இவர்கள்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com