Nepal protest: நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், ஒருவரின் வீடியோ வைரலாகிவருகிறது. இதில் அந்த சுற்றுலாப் பயணி, வன்முறை கும்பல் ஹோட்டலுக்கு தீ வைத்தது என்றும் குச்சியால் தாக்க முற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Nepal protest: நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், ஒருவரின் வீடியோ வைரலாகிவருகிறது. இதில் அந்த சுற்றுலாப் பயணி, வன்முறை கும்பல் ஹோட்டலுக்கு தீ வைத்தது என்றும் குச்சியால் தாக்க முற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Published on: September 10, 2025 at 3:47 pm
காத்மாண்டு, செப்.10 2025: நேபாள நாட்டில் நடந்து வரும் போராட்டங்களின் போது, போகாராவில் இருந்து ஒரு காணொளி வெளியாகி உள்ளது, அந்த வீடியோவில் இந்தியப் பெண் ஒருவர், இந்திய அரசாங்கத்திடம் உதவி கோருகிறார். உபாசனா கில் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தான் ஒரு ஹோட்டலில் இருந்தபோது, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகவும், பின்னர் ஒரு கும்பல் தனக்குப் பின்னால் குச்சிகளை ஏந்தி ஓடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், “என் பெயர் உபாசனா கில், இந்த வீடியோவை பிரஃபுல் கார்க்கு அனுப்புகிறேன். இந்திய தூதரகம் எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு உதவக்கூடிய அனைவரும் தயவுசெய்து உதவுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்திய சுற்றுலாப் பயணி தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. #Nepalprotest | #Nepal | #NepalNews pic.twitter.com/LHJObVJdvQ
— Dravidan Times (@DravidanTimes) September 10, 2025
மேலும், “நான் நேபாளத்தின் பொகாராவில் சிக்கித் தவிக்கிறேன். நான் இங்கு ஒரு கைப்பந்து லீக்கை நடத்த வந்திருந்தேன், தற்போது நான் தங்கியிருந்த ஹோட்டல் எக்கப்பட்டுவிட்டது. எனது அனைத்து பொருள்களும், எனது அனைத்து உடமைகளும் என் அறையில் இருந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, முழு ஹோட்டலும் தீப்பிடித்து எரிந்து விட்டது. நான் ஸ்பாவில் இருந்தேன், அப்போது பொதுமக்கள் மிகப் பெரிய கம்புகளுடன் என் பின்னால் ஓடி வந்தனர், நான் என் உயிரை காப்பாற்ற முடியாமல் தவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் vs வங்கி எஃப்.டி. எது பெஸ்ட் முதலீடு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com