Who was Mohammad Sinwar: ஹமாஸின் காஸா தலைவர் முகம்மது சின்வார் வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
Who was Mohammad Sinwar: ஹமாஸின் காஸா தலைவர் முகம்மது சின்வார் வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
Published on: May 29, 2025 at 12:58 pm
ஹமாஸ் காசா தலைவர் முகமது சின்வார் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை (மே 28 2025) அறிவித்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் கடந்த ஆண்டு (2024) யஹ்யா சின்வாரை போரில் கொன்ற பிறகு, முகம்மது சின்வார் பாலஸ்தீன ஆயுதக் குழுவின் உயர் பதவிக்கு வந்தார்.
இந்த நிலையில் முகம்மது சின்வாரும் போரில் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, “நாங்கள் முகமது டெய்ஃப், (இஸ்மாயில்) ஹனியே, யாஹ்யா சின்வார் மற்றும் முகமது சின்வார் ஆகியோரை அகற்றினோம்” என்றார்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை; என்ன காரணம் தெரியுமா?
யார் இந்த முகம்மது சின்வார்?
தனது சகோதரரும், ஹமாஸின் மறைந்த தலைவருமான யஹ்யா சின்வாரின் மரணத்திற்குப் பிறகு, முஹம்மது காசாவில் இராணுவப் பிரிவையும் அரசியல் கட்டளையையும் ஏற்றுக்கொண்டார். காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் முகம்மது இப்ராஹிம் ஹசன் சின்வார் பிறந்தார், அவர் பல தசாப்தங்களாக ஹமாஸில் பணியாற்றி வந்தார்.
இஸ்ரேல் சபதம் என்ன?
ஹமாஸ் அழிக்கப்படும் வரை அல்லது நிராயுத பாணியாக்கப்பட்டு நாடுகடத்தப்படும் வரையிலும் மீதமுள்ள 58 பணயக்கைதிகளை விடுவிக்கும் வரையிலும் நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. 2023 தாக்குதலில் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் சுமார் 1,200 பேரைக் கொன்றனர். மேலும், 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தினர். இந்நிலையில், இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் சுமார் 54,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ‘அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்’: பாகிஸ்தானுக்கு பதிலளித்த இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com