French President’s wife Brigitte Macron case in US: பிரெஞ்சு ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் மக்ரோன், தான் ஒரு பெண் என்பதை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் ‘அறிவியல் ஆதாரங்களை’ வழங்க உள்ளார்.
French President’s wife Brigitte Macron case in US: பிரெஞ்சு ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் மக்ரோன், தான் ஒரு பெண் என்பதை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் ‘அறிவியல் ஆதாரங்களை’ வழங்க உள்ளார்.
Published on: September 18, 2025 at 6:04 pm
பாரிஸ், செப்.18, 2025: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மனைவி பிரிஜிட், தான் ஒரு பெண் என்பதை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் அறிவியல் மற்றும் புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பிரிஜிட் மக்ரோன் ஆணாகப் பிறந்தவர் என்ற செய்திகள் பிரான்ஸ் நாட்டில் பரவின. இதற்கு நம்பிக்கை கூட்டும் வகையில், அமெரிக்க வலதுசாரி பாட்காஸ்டர் கேண்டஸ் ஓவன்ஸ் இதனை பகிர்ந்தார்.
இதையடுத்து, அவர் மீது மானநஷ்ட அவதூறு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது, தம்பதியினர் ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, பிபிசியின் ஃபேம் அண்டர் ஃபயர் பாட்காஸ்டில் பேசிய மக்ரோன்களுக்காகச் செயல்படும் வழக்கறிஞர் டாம் கிளேர், “பிரிஜிட் இந்தக் கூற்றுகளால் மிகவும் வருந்துகிறார்” என்றார்.
மேலும், “இது அவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. உங்கள் குடும்பம் தாக்கப்படும்போது, அது உங்களையும் பாதிக்கிறது அல்லவா? அதுபோலதான் இதுவும். அவர் ஒரு நாட்டின் அதிபர் என்பதால் மட்டும் அவர் இதிலிருந்து விடுபடவில்லை” என்றார்.
தொடர்ந்து, பிரிஜிட் பெண் என்பது தொடர்பான ஆவணங்களை அவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர் என்பதையும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : சார்லஸ் கிரிக் படுகொலையை கேலி செய்த மாணவர்.. தீயாய் பரவும் வீடியோ.. அமெரிக்காவில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com