Donald Trump: அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Donald Trump: அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Published on: May 5, 2025 at 10:59 am
Updated on: May 5, 2025 at 11:01 am
நியூயார்க், மே 5 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் திரையிடப்படும் அனைத்து வெளிநாட்டுத் தயாரிப்பு படங்களுக்கும் 100% வரிகளை அறிவித்தார். ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கான ஊக்கத்தொகைகள் குறித்த கவலைகள் காரணமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பிப்போது டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக இறந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து விலக்க மற்ற நாடுகள் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன” என்றார். மேலும், “ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் பல்வேறு பகுதிகள் பொருளாதார பேரழிவை நோக்கி நகர்கின்றன” என்றார்.
தொடர்ந்து, “இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி, எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்றார். இதற்கிடையில், “வெளிநாட்டு நாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது நாட்டிற்குள் வரும் எந்தவொரு மற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
இதற்காக வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு நான் அதிகாரம் அளிக்கிறேன்” என்றார். மேலும், “பரப்புரை மற்றும் செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளிலும் வெளிநாட்டு படங்கள் ஈடுபடுகின்றன” எனவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி பதுங்கல்? சென்னை டூ கொழும்பு விமானத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com