Canadian Minister Anita Anand : கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வரும் வாரங்களில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார் என ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகின்றது.
Canadian Minister Anita Anand : கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வரும் வாரங்களில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார் என ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகின்றது.
Published on: September 25, 2025 at 10:39 am
ஒட்டவா, செப்.25, 2025: கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், வரும் வாரங்களில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, “ஒரு நேர்காணலின் போது, அனிதா ஆனந்த், தனது நாட்டு அரசாங்கத்திற்கு உள்நாட்டு பொது பாதுகாப்புதான் முதன்மையான முன்னுரிமை” என்றார்.
இதற்கிடையில், கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தனது இந்திய சகாவை சமீபத்தில் சந்தித்ததாகவும், இருவரும் நாடுகடந்த அடக்குமுறை குறித்து விவாதித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
“கனடா பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நலனுக்காக நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்றார்.
அனிதா ஆனந்த் கடைசியாக இந்த ஆண்டு மே மாதம் ஜெய்சங்கருடன் பேசினார், அப்போது அவர்கள் இருவரும் இந்தியா-கனடா உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஒருதலைப்பட்ச முடிவு.. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com