Syria Gunfight | சிரியாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும், 10 பேர் காயமடைந்தனர்.
Syria Gunfight | சிரியாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும், 10 பேர் காயமடைந்தனர்.
Published on: December 26, 2024 at 1:46 pm
Updated on: December 28, 2024 at 7:49 am
சிரியாவில் துப்பாக்கி சண்டை | சிரியாவில் அதிபர் பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு இரண்டு வாரங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. தொடர்ந்து, அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் என்ற கிளர்ச்சிக்குழு சிரியாவில் ஆட்சியை கைப்பற்றியது. அதிபராக இருந்த பஷிர் அல் அசாத் ரஷியா தப்பிச்சென்றார்.
இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகாமையில் உள்ள பிரபல சைட்னயா சிறைச்சாலையில் முன்னாள் ஆட்சி அதிகாரியான முகமது கன்ஜோ ஹசனை கைது செய்ய ராணுவ நடவடிக்கைத் துறையின் கீழ் பாதுகாப்புப்படையின் ரோந்து குழு முயன்றுள்ளது.
அப்போது ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு விசுவாசமான படையினர் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 14 உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மேலும், 10 பேர் காயமடைந்தனர். மேலும் 3 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR)தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com